Header Ads



குற்றச்சாட்டை மறுக்கும் அலி சப்ரி


வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். 


வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு செய்தியாளர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்தத் தகவல் தெரிய வந்ததாக ஒரு ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . 


எனினும் இந்த தகவல் தவறானது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இது ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சாப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாக அமைச்சர் ட்விட் செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.