Header Ads



மற்றுமொரு வழக்கில் சிக்குகிறார் டயானா


இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த கோரிக்கையை கொழும்பு - பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்றைய தினம் (22.06.2023) விடுத்துள்ளார்.


நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்துள்ளார்.


தனக்கெதிரான வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர் முறைப்பாட்டாளர் பணம் பெற்றுக் கொண்டதாக டயானா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.