Header Ads



உருக்குலைந்த பெட்டிகள், நெஞ்சை உலுக்கும் படங்கள் - உயிரிழந்தவர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்

கொல்கத்தா மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியது. இதில் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகே இருந்த தண்டாவாளத்தில் விழுந்தன. 


அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெட்டிகளின் மீது மோதியதில் இந்த கோர விபத்து நேரிட்டது.


ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் நேற்று இரவு மோதிக் கொண்டன.


'’இது இந்திய ரயில்வே வரலாற்றில் மூன்றாவது மோசமான விபத்து’’ என தேசிய பேரிடர் மீட்புப் படை தலைவர் அதுல் கர்வால் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.


மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.











No comments

Powered by Blogger.