இப்படிச் செய்தால் என்ன..?
وشاةٌ أفضلُ منْ شركةٍ في بَدَنةٍ، عمدة السالك
ஒட்டகை மாடு போன்றவைகளில் கூட்டு சேர்ந்து கொடுப்பதை விட தனியாக ஒரு ஆடு கொடுப்பதே சிறந்தது
عمدة السالك
1) தனியாக மாடு கொடுப்பது
2) தனியாக ஆடு கொடுப்பது
3)கூட்டு குர்பான்
இது தான் இலங்கையில் குர்பான் கொடுக்க வேண்டியவர்களது தெரிவு முறை
ஆனால் தனியாக ஒரு மாடு குர்பான் கொடுக்க முடியாதவர்கள் எல்லோரையும் கூட்டுக் குர்பான் என்ற பெயரில் மூன்றாவது நிலைக்கு கொண்டு செல்கிறார்கள்.
தனியாக ஒரு ஆடு கொடுப்பது என்ற இரண்டாவது நிலை தட்டிக் கழிக்கப் படுகிறது.
கூட்டுக் குர்பான் கூட்டுக் குர்பான் என்று எல்லோரையும் மாட்டிலே கொண்டு வந்து மாட்டிவிடுவதாலோ என்னவோ ஒவ்வொரு வருடமும் ஹஜ் காலத்தில் மாட்டின் விலை ஏறிக் கொண்டே போகிறது
எனவே மாடுகளுக்கு நோய் பரவி இருக்கும் இந்த காலத்தில், மாட்டிலே மாட்டிக் கொள்ளாமல் ஆடு பற்றி சிந்தித்தால் இன்ஷா அல்லாஹ் மாட்டின் விலையையும் குறைக்கலாம்,கொஞ்ஞம் மாற்றி யோசிப்பமே..
முர்ஷித்
17-06-2023.
27-துல் கஃதா 1444.
நியாயமான வரவேற்கத்தக்க கருத்து
ReplyDelete