Header Ads



யாழ்ப்பாணத்தில் மைத்திரிபால - பள்ளிவாசலுக்கும் விஜயம், முஸ்லிம்களுடனும் சந்திப்பு (படங்கள்)


இலங்கையின் 6வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான  மைத்திரிபால சிறிசேன , யாழ் ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்று (29.06.2023) காலை விஜயம் செய்தார்.


பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த  முன்னாள் ஜனாதிபதி அவர்களை பள்ளிவாசலின் பிரதம இமாம் அவர்கள் வரவேற்றார். இதன்போது அங்கிருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட அவர், சமகாலத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.


இதன்போது, யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான  அங்கஜன் இராமநாதன். சஜின் டி வாஸ் குணவர்தன , பேராசிரியர் சமில லியனகே தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.





1 comment:

  1. பார்க்கும் போது யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் கோச்சைத் தவறவிட்ட சமூகமாகத் தான் தெரிகிறது. இந்த மைத்திரிக்கு ஏன் இந்த வரவேற்பு. ஒரு செம்புக்காசிக்கும் பயனில்லாத நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றாது தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நபர் அரசியல் செயவதற்கு அல்ல, சிறையில் அடைத்துவைக்கவேண்டியவர். இவருக்கு வேறு மாலை போடவும் பள்ளிவாயலுக்கு அழைத்து அவர்களின் நேரங்களை பாழாக்கவும பழகியுள்ள இந்த யாழ் முஸ்லிம்கள் புகையிரதத்தைத் தவறிவிட்டு பாதையில் தத்தளிக்கும் ஓர் இனதாகத் தான் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.