அவுஸ்திரேலிய பௌத்த மதகுரு, இலங்கை அரசாங்கத்திற்கு கூறியுள்ள அறிவுரை
சிங்கப்பூருக்கு செல்வதற்காக கொழும்பு விமானநிலையத்திற்கு சென்ற பின்னர் அதிகாரிகளின் குளறுபடிகளால் விமானத்தை தவறவிட்டு அடுத்த விமானத்திற்காக 12 மணித்தியாலம் காத்திருக்கவேண்டிய நிலைக்குள்ளான அஜன்பிரமவன்சோ தேரர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் விமானத்தை தவறவிட்டது குறித்து இலங்கை ஜனாதிபதி விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை எனக்கு தெரியும் யாரோ சிறிய தவறிழைத்துள்ளனர் இது பெரிய விடயமல்ல என தெரிவித்துள்ள அவர் நான் விமானத்தை ஏன் தவறவிட்டேன் என விசாரணை செய்வதற்கு பதில் மேலும் அதிகளவு மன்னிப்பின் மூலம் உங்கள் நாட்டை எவ்வாறு சிறந்த தேசமாக மாற்றலாம் என்பது குறித்து விசாரணை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் தவறிழைக்க அனுமதியுங்கள் மக்கள் தவறிழைப்பதற்கு நீங்கள் அனுமதித்தால் அவர்கள் தவறிழைக்க அச்சப்படமாட்டார்கள் சிறியதவறுகளை செய்வார்கள் அச்சம் காரணமாகவே பலர் தவறிழைக்கின்றனர் இதனை நான் பார்த்திருக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மிகவும் மதிக்கப்படும் பௌத்தமதகுரு அஜன்பிரமவன்சோ விமானப்பயணம் கொழும்பு விமானநிலையத்தில் பல மணிநேரம் தாமதமாகியமை குறித்து பெரும் சர்ச்சை மூண்டுள்ளது.
பிரதமர் தினேஸ்குணவர்த்தன கொழும்பு விமானநிலையத்தில் காணப்பட்டமை காரணமாகவே பௌத்தமதகுருவின் விமானப்பயணத்தை அதிகாரிகள் தாமதித்தனர் என முதலில் தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவின் பிரசன்னம் காரணமாகவே அவரது பயணம் தாமதமானது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
பௌத்த மதகுரு சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சிங்கப்பூருக்கும் பின்னர் பேர்த்திற்கும் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை கொழும்பு விமானநிலையத்திற்கு சென்றுள்ளார்- விமானத்தில் ஏறுவதற்காக முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் அவர் காத்திருந்துள்ளார்.
அமைச்சர் நிமால்சிறிபால டிசில்வாவும் முக்கிய பிரமுகர்களிற்கான பகுதியில் காணப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் அவுஸ்திரேலியாவை சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு உதவிக்கொண்டிருந்த விமானநிலைய அதிகாரி அமைச்சரை விமானத்திற்குள் ஏற்றுவதற்காக அவருடன் விமானத்திற்குள் சென்றுள்ளார்
எனினும் அந்த அதிகாரி பௌத்தமதகுருவை விமானத்தில் ஏற்ற மறந்துள்ளார்- மேலும் அவர் தாமதமாக வந்ததால் பௌத்தமதகுரு குறிப்பிட்ட விமானத்தில் ஏற முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பௌத்தமதகுரு அந்த விமானத்தை தவறவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – அவரது பயணம் 12 மணித்தியலாங்கள் தாமதமாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
(வீரகேசரி)
Post a Comment