ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் குறித்து...!
சமூகவியலிலிருந்து வரலாறு என்பது தனிப்பாடமாகப் பிரிக்கப்பட்டு முதலாவது க.பொ.தர சாதாரண பரீட்சைக்காக முகங்கொடுக்க காத்திருந்த எனக்கு இவரைச் சந்திக்கும் வரை வரலாறு பாடம் சுத்த சூனியமாகவே இருந்தது.
எதிர்நோக்கும் பரீட்சையில் "S" தரத்திலாவது ஒரு பெறுபேறு கிட்டுமா என்று இருக்கையில்,
பரீட்சைக்கு ஒரு கிழமைக்கு முன்னால் இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் வைத்திருப்பார். அவருடைய கற்பிக்கும் திறன் அவருடைய மனப்பாங்கு எல்லாமே சேர்ந்து இறைவனுடைய நாட்டத்தில், வரலாறு பாடத்தில் "A" சித்தியைப் பெற்றுத் தந்தது.
எனது ஆசிரியர் ஷாபி, யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின் புதிய அதிபராகப் பொறுப்பேற்கப் போகிறார் என்ற செய்தி பகிழ்வைத் தருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் உங்களுக்கு ஈருகிலும் அருள் புரியட்டும்.
உங்கள் மாணவன்.
அனீஸ் அலி முஹம்மது.
23.06.2023
Post a Comment