Header Ads



வட்ஸப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விடயம்


வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும் Silence Unknown Callers என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தெரியாத நபர்களின் தொல்லை அழைப்புகளின் இம்சையில் இருந்து தப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.


தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த புதிய அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Silence Unknown Callers: இந்த அம்சம் எப்படி வேலை செய்கிறது என்றால் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வரும் தெரியாத இன்கம்மிங் அழைப்புகளை சைலண்ட் மோடில் வைக்கிறது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ரிங்க்டோன் ஒலி ஒலிக்காது. அதாவது பயனர்களின் கான்டெக்ட் பட்டியலில் இல்லாத எண்களில் இருந்து வரும் அனைத்து அழைப்புகளும் சைலண்ட் மோடில் இருக்கும். அதே நேரத்தில் இந்த அழைப்புகள் நோட்டிபிகேஷனில் டிஸ்பிளே ஆகும்.


பயனர்கள் இதை ஆக்டிவேட் செய்ய ‘செட்டிங்ஸ் > பிரைவசி > கால்ஸ் > Silence Unknown Callers ஆக்டிவேட் செய்ய வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் இதை பயன்படுத்த முடியும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் பயனர்களுக்கு வேண்டாத தொல்லை அழைப்புகள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.


 

No comments

Powered by Blogger.