கொழும்புக்கு வரும் புத்தம் புதிய நீர்மூழ்கி கப்பல் - மக்களும் பார்வையிடலாம்
குறித்த பயணம் 9 ஆவது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடும் வகையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'வாகீர்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நாளை முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாட்டில் சில கடற்படைசார் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விஜயத்தின் போது, இந்திய நீர்மூழ்கிக் கப்பல் படைத் தளபதி மற்றும் இலங்கையின் மேற்கு கடற்படைக் கட்டளைப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலை பாடசாலை மாணவர்கள் மற்றும் இலங்கை மக்கள் பார்வையிட முடியும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தருவது, இந்தியாவின் பார்வையில் உள்ள இலங்கைக்கான முன்னுரிமை கொள்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) ஆகியவற்றின் அடிப்படையில் இரு அண்டை கடற்படைகளுக்கு இடையே சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment