சனிக்கிழமை பாராளுமன்றம் கூடுகிறது - வர்த்தமானி வெளியானது
சனிக்கிழமை (ஜூலை 01) பாராளுமன்றத்தின் விசேட அமர்வைக் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் 16 ஆம் நிலையியற் கட்டளைக்கு அமைய சபாநாயகர் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை கூட்டவுள்ளார்.
முன்னதாக உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒப்புதல் பெறுவதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பாராளுமன்றம் கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment