நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்களின் கவனத்திற்கு
நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னர் வழங்கப்பட்ட மானியங்களை விட அதிகமாக வழங்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உண்மையான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, பொது மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனவும், குறைந்த வருமானம் பெறுவோரும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களும் இந்த மானியங்களை இழக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாரே எழுதிக் கொடுத்ததை வாசிக்கும ்இந்த நபரிடம் இதில் உள்ள உள்ளடக்கம் பற்றிக் கேட்டால் நிச்சியமாக எதுவும் தெரியாது. தானும் மாடாகி மக்களையும் மாடாக்கும் மந்திக்கூட்டத்தின் செயற்பாடுகளைப் பார்ககும் போது உண்மையில் கவலை கவலையாகத்தான் வருகின்ற்து.
ReplyDelete