Header Ads



"ரணிலின் காலை வாரும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன"


அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தலைவர்களை விட ரணில் விக்ரமசிங்க அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்று வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.


அதன் காரணமாக ரணிலிடம் குரலை உயர்த்தி பேசக்கூடிய தலைவர் உலகில் யாரும் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


பலபிட்டிய மற்றும் ரஜ்கம தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய வஜிர அபேவர்த்தன, ரணில் விக்ரமசிங்கவுக்கு உலக தலைவர்களிடம் பெரும் அங்கீகாரமும் மரியாதையும் இருக்கின்றது.


அதற்கு காரணம் அவரது நீண்ட அரசியல் அனுபவமாகும். நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்ள ரணில் மாத்திரமே முன்வந்தார்.


ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் ஒவ்வொரு முறையும் அவரது காலை வாரும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. இறுதியில் நாட்டு மக்களே அதற்கான விலையை கொடுக்க நேரிட்டுள்ளது.


தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டங்களை நடத்தி கட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


அதன் பின்னர் கட்சி மாநாட்டை கூட்டி கட்சியின் அரசியலமைப்பை புதிய உலகிற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். Twin

No comments

Powered by Blogger.