Header Ads



நாமலின் ஆவேசமான பதிலடி


"ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருக்கின்றார்" என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மேலும் "ரணில் விக்ரமசிங்கவின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர் என்றும் இதை வஜிர அபேவர்த்தன மறுக்க மாட்டார் என நான் நினைக்கின்றேன்" எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.


ராஜபக்சக்கள் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்திருந்தார்.

 

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே நாமல் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறியுள்ளதாவது, "ராஜபக்சக்கள் எவரும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்பமாட்டார்கள் என்று என்ன துணிவுடன் வஜிர கூறினார் என்று எனக்குத் தெரியாது.


மக்கள் ஆணை இன்னமும் ராஜபக்சக்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் உண்டு.


இதை வஜிர அபேவர்த்தன உள்ளிட்ட எவரும் நம்ப வில்லையாயின் தேசிய ரீதியில் தேர்தல் ஒன்றை விரைந்து நடத்திக் காட்டுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.


அந்தத் தேர்தலில் மக்கள் ஆணை எவருக்கு, எந்தக் கட்சிக்கு உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்" என கூறியுள்ளார்.

1 comment:

  1. ஏதோ போதையில் உளரும் இந்த நாமலுக்கும் வீணாப் போன ராஜபக்‌ஷாக்களுக்கும் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க பொதுமக்கள் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள். அந்தப் பேயன் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நாட்டை விட்டு ஓடவில்லை. பதவியை வீசிவிட்டு உயிரைப் பாதுகாத்துக் கொள்ளத் தான் அவன் நாட்டைவிட்டு ஓடியது என்பதை இந்த நாட்டில் மட்டுமல்ல முழு உலகமும் நன்றாக அறிந்துவைத்திருக்கும் உ்ண்மை, அதனை மறுப்பவன் போதையில் உளருபவன் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதுபற்றி பொதுமக்கள் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். நீ உளத்திக் கொண்டே இரு. அது பொதுமக்களின் வாயுக்குள் விழும் அவலாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.