Header Ads



ஸவுதி ஆடசியாளர்களின் முழுச் செலவில் உலகின் பல நாடுகளில் ஹஜ் செய்யும் வாய்ப்பு.


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜை ஒரு தடவையாவது வாழ்க்கையில் செய்துவிட வேண்டும் என்பது பல லட்ச்சம் முஸ்லிம்களின் கனவும் உழைப்புமாகும். ஆனாலும் அதற்கு பலருக்கும் வாய்ப்பும் இல்லாமல் போகின்றது. இதில் முஸ்லிம் சமூகத்திற்காக பல் துறைகளில் உழைப்பவர்களும், சமூகத்தில் உயர் அந்தஸ்து மிக்கவர்களும் விதிவிலக்கல்ல இஸ்லாமிய சமூகத்தின் மார்க்கல்வி, பொதுக்கல்வி, ஊடகம், அரசியல் என்று பல துறைகளில் முன்நிலையில் இருக்கும் பலரிடமும் வறுமை தாண்டவமாடுகின்றது. அல்லது ஹஜ்ஜுக்கு சென்று வருவதற்கான போதிய அளவு நிதி இல்லாத நிலை உள்ளது. இதைக் கவனத்திற்கொன்டே ஸவுதி அரேபிய மன்னர்கள் இஸ்லாமிய சமூகத்திற்காக உழைக்கும் இத்தகைய மனிதர்களை கொளரவிக்கும் நோக்கில் வருடாந்தம் தங்களின் முழு செலவில் இத்தகையவர்களின் கனவை நிரைவேற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றனர். 


இம்முறையும் உலகின் 90 நாடுகளைச் சேர்ந்த 1300 முக்கியஸ்தர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது இது தவிர ஸிரியாவில் குடும்பங்களை இழந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் பலஸ்தீனைச் சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸவுதி மன்னர் ஸல்மானின் அழைப்பின் பேரில் செல்லும் இவர்களின் முழுச் செலவையும் மன்னரே பொறுப்பேற்பதுடன் மிகவும் உயர்வான வரவேற்பும் உபசரணையும் அவர்கள் தங்கியிருக்கும் அத்தனை நாட்களும் அத்தனை இடங்களிலும் வழங்கப்படுகின்றன.


ஸவுதியின் பல துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட வித்திட்ட மன்னர் பஹ்த் பின் அப்துல் அஸீஸ் அவர்களே இத்திட்டத்தின் முன்னோடியாவார் அன்றிலிருந்து இன்றுவரை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 20000 (இருபதாயி) ரத்திற்கும் அதிகமானவர்கள் இந்தப் பெரு வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மன்னர் பஹ்த் அவர்களினால் ஆரம்பிக்கப் பட்ட இந்த போற்றத்தகு செயல் இன்றும் என்றும் தொடரவும் அதன் மூலம் பல்லாயிரம் பேர் பயன் பெறவும் அதனை அல்லாஹ் அவர்களின் நன்மைப் பட்டோளைகளில் கனதியானதாக ஆக்கவும் பிரார்த்திப்போமாக.


M.B.M.ISMAIL MADANI

No comments

Powered by Blogger.