தாமதத்திற்கான காரணத்தைக் கூறும் சிறிலங்கன் எயார்லைன்ஸ்
கடந்த 20 ஆம் திகதி தென்கொரியாவிற்கு சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதம் அடைந்ததுக்கான காரணத்தை சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ளது.
அதன்படி கட்டுநாயக்காவில் இருந்து சியோல் நோக்கிப் புறப்படவிருந்த சிறிலங்கன் விமானத்தின் இரு விமானிகளில் ஒருவர் திடீர் சுகயீனமடைந்ததாலே இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானிகளின் ஓய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் காரணமாக நேற்று (21) வரை மற்றுமொரு விமானியை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த விமானத்தின் தாமதம் காரணமாக தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லவிருந்த சுமார் 80 பேரை தென்கொரியா நிராகரித்துள்ளது.
அவர்களை மீண்டும் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment