இருவர் உயிரிழப்பு - நுவரெலியாவில் சம்பவம்
நுவரெலியாவில் கொங்கிரீட் வேலையில் ஈடுபட்டிருந்த இருவர் 25 அடி உயர சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(16) இடம்பெற்றுள்ளது.
விருந்தகம் ஒன்றுக்கு மதில் கட்டும் பணியில் 9 பேர் ஈடுபட்டிருந்த நிலையில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, மண்ணில் புதையுண்ட இருவர் குறித்த பகுதி மக்களால் மீட்கப்பட்டு நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காலி - ஹில்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 மற்றும் 25 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாளை சட்ட வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் சடலங்கள் காலி எல்பிட்டிய பகுதிக்கு கொண்டு செல்லப்படும் என நுவரெலியா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment