ராஜாங்க அமைச்சரின் வீட்டிற்கு கற்களால் தாக்குதல்
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவின் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கோனவல - பமுனுவல சரத்சந்திர டயஸ் வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீதே இவ்வாறு தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக வீட்டின் ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் தாக்குதல் மேற்கொண்டவர்களை அருகில் காணப்படும் சிசிடிவி கமராக்களின் ஊடாக அடையாளம் காண பொலிஸார் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment