அவ்வாறான தவறைச் செய்ய வேண்டாமென ஜனாதிபதியை கோருகிறேன்
இந்த வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு பணம் தேவைப்படுவதாகவும், அதற்கான எளிதான வழி கமிஷன்கள்,இலஞ்சம் மற்றும் திருடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதாகவும் எனவும்,பண்டோரா பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான டொலர்களை நாட்டுக்கு மீளப் பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இந்நேரத்தில் நாட்டுக்கு தேவையான அந்த பணத்தை பெற்றுக்கொடுப்பதே என்றாலும்,திருடர்களை நம்பி இருக்கும் ஒரு தலைவரால் திருடர்களை பிடிக்கும் செயற்பாட்டை மேற்கொள்ள முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,நாட்டை அழித்த திருட்டு ராஜபக்ஷ குடும்பமும் அவர்களின் விசுவாசமான எம்.பி.க்களுமே தற்போதைய ஜனாதிபதியின் அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் திருடப்பட்ட பணத்தை மீட்பதன் மூலம் இந்நாட்டை மீட்டெடுத்து நாட்டுக்கு புதிய யுகத்தை கொண்டு வர முடியும் எனவும், இதற்கு ஒரே பதில் ஐக்கிய மக்கள் சக்தியே எனவும்,ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் திருடப்பட்ட பணம் அனைத்தும் மீட்கப்பட்டு குறித்த பணம் அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் நீதிமன்ற நீதிபதிகளும் சந்தித்து ஒன்றாக விருந்துபசாரம் பகிர்ந்து கொள்வதான செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தாலும் குறித்த செய்தி பொய்யானதாக இருக்க தாம் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.ஆனால் அவ்வாறானதொரு விடயம் நடந்திருந்தால் அது பாரதூரமான விடயம் என்றும்,ஜனநாயக அமைப்பின் மூன்று தூண்களான நிறைவேற்றும்,நிர்வாகமும்,நீதித்துறையும் தனித்தனியாக செயல்பட வேண்டும் என்றும், நீதித்துறை சுதந்திரமாக செயல்பட இடமளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு விருந்துபசாரமொன்று நடந்திருந்தால் நீதிமன்ற நீதிபதிகள் கூட தர்மசங்கடங்களுக்கு ஆளாகுவதாகவும்,
சட்டத்தின் ஆட்சி செயல்முறைக்கு இது தடங்களை ஏற்படுத்துவதானதாகும் என்றும், இது சிறந்த ஆட்சிக்கான போக்கல்ல எனவும், நீதித்துறையை நோக்கி விரல் நீட்டக்கூடாது என்ற கொள்கையை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறானதொரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அந்தச் செய்தி உண்மையாக இருக்குமானால், அவ்வாறான தவறைச் செய்ய வேண்டாம் என ஜனாதிபதியிடம் தாம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உதாவக அரமும வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம மோடி கிராமத்தில் நேற்று (2) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment