Header Ads



மாணவர்களிடம் பணம் வசூலித்து டியுஸன் வகுப்புகளை நடத்தத் தடை


தங்களிடம் கல்விக்கற்கும், மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் தனியார் வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேலும், பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பணம் வசூலிக்காமல், நல்ல எண்ணத்துடன் மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கு, எவ்வித தடையும் இல்லை என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகேயின் ஆலோசனைக்கு அமைய இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


சமத்துவமான பாடசாலைக் கல்வியை மத்திய மாகாணத்தில் நிறுவும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, சுற்றறிக்கையை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை பரிசீலித்து சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதாகவும் மத்திய மாகாண கல்வி செயலாளர் யு.பி. ஹேரத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.