பன்றிகள், கால்நடைகள், கோழியிலிருந்து விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் - ஆபத்து' என எச்சரிக்கும் நிபுணர்கள்
இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விலங்குகளின் கொழுப்பு ஒரு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது.
விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மூன்று மடங்கு அதிகரிக்கும் எனக் கருதப்படும் நிலையில், விமானப் போக்குவரத்துக்கு இந்த எரிபொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மற்ற தொழில்துறைகளுக்குத் தேவையான கொழுப்பு கிடைக்காது என்பதால் அத்துறைகளில் பனை எண்ணெய் பயன்படுத்தப்படும் நிலை ஏற்படும் என்றும், இது கரிம வெளியேற்றத்தைப் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். bbc
Post a Comment