திடீரென பின்வாங்கிய வாக்னர் குழு - பெலாரஸ் ஜனாதிபதியின் முயற்சி வெற்றி
ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் படைகளின் இயக்கத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தை தணிக்கும் வகையில், படை அணிவகுப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் வாக்னர் குழுவின் தாக்குதலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி சார்பாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய இராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அந்நாட்டில் பெரும் பதற்றம் உருவானது.
இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் வெடிக்கும் சூழல் உருவாகியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment