Header Ads



தனது பிள்ளைக்காக போராடும் தாய்


கொழும்பில் தனது பிள்ளைக்கு கல்வி வேண்டும் என ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


இலங்கை அரசாங்கம்  பாடசாலைகளில் இலவச கல்வியே  வழங்கப்படுகின்ற அந்த தாயின் போராட்டம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்நிலையில் ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே, இவ்வாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


தனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என கூறிய அந்த தாயார், தன் பிள்ளை அங்கு படிப்பதை பிறபெற்றோர்கள் விரும்பவில்லை எனவும் கூறினார்.


இது தொடர்பில் அந்த பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்துக்கும் பாடசாலையின் அதிபருக்கும் அறிவித்துள்ளார்கள். இதனால், பிள்ளையை பாடசாலையை சேர்த்துக்கொள்ள அதிபர் மறுக்கிறார் என அந்த தாயார்   கூறியுள்ளார்.


 போராட்டத்தில் ஈடுபட்ட தாயை ஜனாதிபதி செயலகத்துக்குள் அழைத்துச் செல்வதாகவும், எனினும் அவரது கையிலிருக்கும் பதாகையை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் பொலிஸார் கூற , வந்தால் பதாகையை வருவேன் என பொலிஸாரிடம் கூறுகின்றார்.


இந்நிலையில் இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எதற்காக அந்த மாணவியை பாடசாலை நிராகரித்தது என்பதற்கான தகவல் வெளியாகவில்லை.       jvp

No comments

Powered by Blogger.