மக்களின் குற்றச்சாட்டு
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் உடனடியாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறக்குமதியாளர்கள் பொருட்களை அதிக விலைக்கு விற்பதாகவும் இதனால் சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டொலரின் பெறுமதி குறையும் போது பொருட்களின் விலை குறையாது எனவும் டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது அடுத்த நாளே பொருட்களின் விலை அதிகரிக்கின்றது எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Post a Comment