Header Ads



பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்பு


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் இன்று -16- பல்கலைக்கழகத்துக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்க யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொறியியல் பீட மாணவர்கள் தங்கும் அக்பர் மண்டபத்தில் அவர் தங்கியிருந்த அறையின் கழிவறையில் அவரது சடலம் தூக்கில் தொங்குவதைப் பார்த்த மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவித்தனர்.


இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழக நிர்வாகமும் பேராதனைப் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments

Powered by Blogger.