கோட்டாபயவிற்கு நடந்தது ரணிலுக்கு நடக்காது என பொதுஜன பெரமுன உறுதியளிக்கும்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நடந்தது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நடக்காது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுதியளிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்துள்ளார்.
“சவாலை எதிர்கொள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளும் துணிவு சஜித்திற்கு இருக்கவில்லை.
இக்கட்டான சூழலில் ரணில் தான் முன்வந்து நாட்டைப் பொறுப்பேற்று இன்று அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கியுள்ளார்“ என அவர் தெரிவித்தார்.
“பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள், இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தேவையான ஆதரவை வழங்குவோம். கோட்டபாய ராஜபக்சவிற்கு நடந்தது ரணிலுக்கும் நடக்க நாம் அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் பிரச்சினை அல்ல. இது மக்களின் வாழ்க்கை தொடர்பான விடயம். அரசியலை நாங்கள் தேர்தல் வேளைகளில் செய்யலாம்” என மஹிந்தானந்த மேலும் தெரிவித்தார்.
Post a Comment