ரயில் சேவையை தனியாருக்கு வழங்க முயற்சியா..? ரணிலுக்கு நெருக்கமானவர் தீவிரம்
பல இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க முயற்சிப்பதாகவும், ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு உயர்மட்ட அரசியல்வாதி அதற்காக முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இது தொடர்பில் புகையிரத திணைக்களத்தின் பல பிரதானிகளுடன் காலியில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகவும், அந்த அதிகாரிகள் திணைக்களத்தை தனியார் மயமாக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றுவதற்கு போக்குவரத்து அமைச்சர் தீர்மானித்திருந்த போதிலும் கொழும்பில் இருந்து கண்டி, தெற்கு ரயில்வே மற்றும் வடக்கு புகையிரதத்தை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. ரயில்வே தொழிற்சங்கங்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அறியப்படுகிறது.
இதுகுறித்து, ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்கவிடம் வினவியபோது, தனியார் மயமாக்கல் தொடர்பான எந்தவொரு பிரேரணையும் இதுவரை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படவில்லை என்று கூறினார்.
அருண
Post a Comment