ஆடியபடி பட்டம் வாங்கச் சென்ற சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ஒவ்வொருவராக பட்டங்களை பெற்றுக் கொண்டு, அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர். இதற்கிடையில் அப்துல் ரஹ்மான் என்ற மாணவியின் பெயரை அழைத்தனர். தனது பெயரை அழைத்ததும் உற்சாகமடைந்த மாணவி, மேடை ஏறும் போது சிரித்துக்கொண்டும், ஆட்டம் போட்டுக் கொண்டும் மேடையை நோக்கிச் சென்றார். கல்லூரியின் முதல்வர் அருகே சென்றதும், அவரை பார்த்து சிரித்துக் கொண்டே பட்டத்தை பெற முயன்றார்.
ஆனால் அவருக்கு கல்லூரியின் முதல்வர் பட்டத்தை வழங்கவில்லை. மாறாக மேடைக்கு வரும் போது ஆடிக்கொண்டு வந்ததால், பட்டத்தை தர மறுத்து கீழே போட்டுவிட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி, வேறுவழியின்றி தனது இருக்கைக்கு திரும்பினார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உற்சாகமாக மேடைக்கு வந்த மாணவியை ஊக்கப்படுத்தாமல், அவரது பட்டப்படிப்பு சான்றிதழை வழங்க மறுத்தது அநாகரிகமான செயல் என்றும், கல்லூரியின் முதல்வர் அணுகுமுறை ஏற்கத்தக்கதாக இல்லை என்றும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
Post a Comment