ஜனாதிபதியினதும், எதிர்க்கட்சித் தலைவரினதும் பெருநாள் வாழ்த்துச் செய்தி
மக்களை சிரமத்தில் இருந்து மீட்பதற்கு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் முன்வந்து அதற்கு தீர்வு காணும் மனிதாபிமான பணியில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் திருப்தியையும் ஹஜ் பண்டிகை பிரதிபலிக்கிறது.
அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் அடையாளமாக நபி இப்ராஹிம், அவரது மகன் நபி இஸ்மாயில் மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோர் கருதப்படுகிறார்கள். பல நூற்றாண்டுகளாக, அவர்கள் செய்த தியாகங்களுக்கு நன்றியின் வெளிப்பாடாக முழு உலக மக்களாலும் போற்றப்படுகின்றனர்.
அண்மைக் காலங்களில் இலங்கை இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலைக்கு முகங்கொடுத்தது. அந்தக் கஷ்டங்களைச் சமாளித்து நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் சாதகமான காரணங்களாக அமைந்தன. நீங்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்வதற்கும் கடந்த வரலாற்றுக்கால முக்கியமான தருணத்தை நினைவுபடுத்துவதற்கும் ஹஜ் பண்டிகை மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன்.
அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும், பங்கேற்பும் மிகவும் முக்கியமானது. பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்க ஹஜ் பண்டிகையின் போது உங்களை அழைக்கிறேன்.
பெரியவர்களாகிய நாம் அனுபவிக்கும் இன்னல்களை வருங்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லாமல், அவர்களை நிலையான மகிழ்ச்சியுடன் கூடிய பூகோள சமூகத்தின் பெருமை மிக்க மக்களாக உயர்த்துவதன் முக்கியத்துவத்தை முதியோர், இளையோர் என அனைவருக்கும் இந்த அற்புதமான ஹஜ் பெருநாளில் நான் நினைவூட்டுகிறேன்.
எதிர்வரும் ஹஜ் பெருநாள் அனைத்து இலங்கை முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் மற்றும் உலகளாவிய முஸ்லிங்களுக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக அமைய பிரார்த்திக்கிறேன்.
ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
28-06-2023
எதிர்க்கட்சித் தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி.
ஹஜ்ஜுப் பெருநாள் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான சமயப் பண்டிகையாகும்.நபிகள் நாயகத்தின் போதனைகளின்படி முஸ்லிம்கள் ஒற்றுமையாக ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுகிறார்கள்.
இந்தப் பெருநாளை மனிதநேயத்திற்கும் இறைவனுக்கும் இடையிலான அற்புதமான பிணைப்பை பிரதிபலிக்கும் பெருநாளாகக் கருதலாம்.ஹஜ்ஜுப் பெருநாளின் முக்கிய நோக்கம் சமூக இடைவெளி மற்றும் பல்வேறு வேறுபாடுகளைக் குறைத்து சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நற்பண்பு சிந்தனைகளை உருவாக்குவதாகும்.
சவூதி அரேபியாவின் மக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஹஜ் புனிதப் பயணம், இப்ராஹிம் நபி மற்றும் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை குறிக்கும் நிகழ்வாக ஹஜ் கருதப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் எந்த வேறுபாடும் இன்றி ஒன்று கூடி உலக அமைதிக்கான இறைவனை வழிபடுகின்ற ஒரு சர்வதேச மாநாடாகவும் ஹஜ் புனிதப் பயணத்தைக் கருதலாம்.இஸ்லாத்தின் ஐந்து பெரிய கடமைகளில் ஐந்தாவது கடமை ஹஜ் செய்ய வேண்டும்.இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காவுக்குச் சென்று ஹஜ் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் பிரார்த்தனையாகும்.அந்தப் பிரார்த்தனை நிறைவேற நானும் பிரார்த்திக்கின்றேன்.
ஹஜ்ஜின் நோக்கங்கள் நனவாகி,இனிய ஈதுல் அல்ஹா பெருநாளாக அமையட்டும்.
மகிழ்ச்சியின்மை மற்றும் இருள் சூழ்ந்த நிலைமை முடிவுக்கு வரட்டும்,மகிழ்ச்சியும் சௌபாக்கியமும் உருவாகட்டும்.
சமூக விழுமியங்களை வலுப்படுத்தவும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், நற்செயல்களை முன்னுதாரணமாகவும் ஆக்கிய ஆன்மீகப் பண்டிகையான ஹஜ் பங்களிப்புச் செய்கின்றது.
புனித திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கைத் தத்துவத்தைப் பின்பற்றும் இஸ்லாமியர்களாகிய உங்கள் அனைவருக்கும் இந்த ஹஜ் பெருநாள் ஆன்மிக முன்னேற்றத்தின் மகத்தான நாளாக அமையட்டும்.!!
சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர்
Post a Comment