விட்டுக் கொடுத்தார் அலி சப்ரி, குடி பெயர்ந்தார் கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரச இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
முன்னர் அது, அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டது.
இந்த வீடு, பாதுகாப்புப் படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு அருகில் அமைந்துள்ளது.
முன்னதாக இந்த இல்லத்தை விடுவிக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் தலைவர்கள் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் பேச வேண்டியிருந்தது. ஏனெனில் அந்த வீடு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
கோட்டாபய ராஜபக்ச புதிய பங்களாவுக்குச் செல்வதற்குக் கூறிய காரணம், வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று மீண்டும் கோட்டாபய நாடு திரும்பியதும், கொழும்பு மலலசேகர மாவத்தையில் வீடு வழங்கப்பட்டது.
எனினும் அங்கு அதிகமான சத்தம் இருப்பதாக கூறி அவர் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, தாம் பதவி வகித்த போது, பெற்றுக்கொண்ட அதே அளவு எண்ணிக்கையான பாதுகாப்பை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளார்.
அதன்படி நூறுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment