இங்கிலாந்து - அமெரிக்கா நாடுகளைவிட, ரணிலிடம் உள்ள பெரிய விடயம்
சரிந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உலகிற்கு முன்னுதாரணமாக உயர்த்திய ரணிலின் தொலைநோக்குப் பார்வை இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளை விடவும் பெரியது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தின் பத்தேகம மற்றும் அக்மீமன ஆகிய தொகுதிகளின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்த தேசத்தை மீளக் கட்டியெழுப்பவும், அதனை உலக நாடுகளுடன் முன்னோக்கி கொண்டு செல்லவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் முடிந்ததாக அவர் தெரிவித்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் முற்றாக வீழ்ச்சியடைந்த நாட்டை ரணில் விக்ரமசிங்க கைப்பற்றி, உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, நாட்டை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்வதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளான உலகின் ஏனைய நாடுகள் இன்னும் சரியாக எழுச்சி பெற முடியாத நிலையில், ஜனாதிபதியின் சரியான தொலைநோக்குப் பார்வையினால் நாடு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளதாக அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
முன்னேற்றமடையாத பல நெருக்கடிகளைக் கொண்ட எகிப்து நாட்டில் மத்திய தர குடும்பம் ஒன்றின் மின்சார பாவனைக்கான மாதாந்தக்கட்டணம் ( 5-6 பேர் கொண்ட குடும்பம்) ரூபா 80 முதல் 100 வரையிலும் அதே குடும்பத்தின் நீர்பாவனைக்கான மாதாந்த கட்டணம் ரூபா 12 -14 ரூபா வரை மாத்திரம் தான். அப்படியானால் இலங்கை என்ன பொருளாதார முன்னேற்றத்தை எட்டியிருக்கின்றது. மாதாமாதம் சாதாரண குடும்பம் ஒன்று மின்சார கட்டணம் ரூபா 5000/- நீர் பாவனைக்கட்டணம் ரூபா 1000 ஐயும் செலுத்துவதற்கு மாதாமாதம் பெரும் போராட்டம் நடாத்த வேண்டியிருக்கின்றது. உணவு, மருந்து உற்பட அத்தியாவசிய தேவைகளுக்கு அந்த மக்கள் படும் பாட்டை கடவுள் மாத்திரம் அறிவார். இதுதானா இந்த அரசாங்கம் செய்துள்ள பொருளாதார முன்னேற்றம்.
ReplyDelete