Header Ads



வாகன இறக்குமதிக்காக, காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி


நாட்டுக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய நிலையில் அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ரூபாவின் மீள் பெறுமதி வீழ்ச்சியானது தேவை மற்றும் விநியோகத்தினால் ஏற்படுகின்ற ஒரு சாதாரண நிலைமை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


இந்த நாட்களில் அத்தியாவசிய எாிபொருள் கொள்வனவிற்காக பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரே நேரத்தில் சுமார் 75 முதல் 80 மில்லியன் டொலர்களை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டது.


அதை சந்தை மற்றும் மத்திய வங்கியிடம் இருந்து கொள்வனவு செய்ததனால் டொலாின் பெறுமதி சற்று அதிகாித்தது. நம் நாட்டில் சிலா் டொலாில் முதலீடு செய்கின்ற நிலையில் அவா்களும் டொலாினை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளனா்.


அதன் காரணமாக டொலரின் பெறுமதி 320 ரூபாயாக எகிறியது. அத்துடன் நேற்று மீண்டும் 306 ரூபாய் என்ற நிலைக்கு வந்ததையும் பார்த்தோம். இது ஒரு அசாதாரணமான சூழ்நிலை அல்ல, தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நிகழும் சாதாரண ஒரு விடயம்.


எனினும் தற்போதைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறினார்.

No comments

Powered by Blogger.