Header Ads



இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வழங்கியுள்ள ருமேனியா


நாட்டில் ஏற்றுமதிகளுக்கு GSP Plus வரிச்சலுகைகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு ருமேனிய நாடு ஆதரவளிக்கும் என்றும் அந்நாட்டின் இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.


இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில் விவகாரங்கள் தொடரிபில் கலந்துரையாடுவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் Dinesh Gunawardena ருமேனிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் அலரிமாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது ருமேனிய தலைநகர் புக்கரெஸ்டில் இலங்கை தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்காக ருமேனிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் Traian Hristea (டிரேயன் ஹிரிஸ்டியா) இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, 2016 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையர்களுக்கு மிகவும் பிரபலமான வேலைத் தளமாக ருமேனியா இருந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்ததார்.


இதேவேளை, ஆடை, கட்டுமானம், ஹோட்டல், விவசாயம் ஆகிய துறைகளில் 32,000க்கும் மேற்பட்ட இலங்கை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


ருமேனியா தற்போது பாரிய உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தி வருவதால், இலங்கையர்களுக்கு மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதாக ருமேனிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.


இச்சந்தர்ப்பத்தில் கல்வி, விவசாயம், ரயில்வே, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டார்.


தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தொடர்ச்சியான ஆதரவு நாட்டுக்கு தேவை எனவும் வலியுறுத்தியிருந்தார்.

No comments

Powered by Blogger.