கத்தார் எயார்வேஸில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
கத்தாரின் தேசிய விமானசேவை நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் இலங்கையர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, கொழும்பில் கேபின் க்ரூவை ஆட்சேர்ப்பு செய்யவுள்ளதாக கத்தார் எயார்வேஸ் அறிவித்துள்ளது.
கத்தார் ஏர்வேஸ் தனது இணையதளத்தில், விண்ணப்பதாரர்களுக்கான தேவைகள் மற்றும் தகுதிகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிபரக் கோவையை பதிவேற்றம் செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள முக்கிய நகரத்திற்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment