பொலிஸார் எனக் கூறப்பட்டவர்களால் கடத்தப்பட்ட இளைஞன்
23 வயதான குறித்த இளைஞன் கொஸ்கொட பகுதியில் வைத்து காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் கடந்த தினம், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை ஊடாக நடந்துசென்ற போது, கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து, முச்சக்கரவண்டியில் பிரவேசித்த இருவர், தங்களை பொலிஸ் அதிகாரிகள் என அடையாளப்படுத்தி உள்ளனர்.
இதையடுத்து, அந்த இளைஞனை முச்சக்கரவண்டிக்குள் பலவந்தமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.
போதைப்பொருள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக, அவர்கள் குறித்த இளைஞனிடம் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், புறக்கோட்டை பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று, குறித்த முச்சக்கரவண்டியை சந்தேகத்தின் அடிப்படையில் பின்தொடர்ந்த போது, மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன்போது, குறித்த இளைஞன் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்ததை அடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
எவ்வாறிருப்பினும், இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், பொலிஸ் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
Post a Comment