ஜனாதிபதி சொல்வது போல் நாங்கள் ஆடத் தயாரில்லை
* ஏழ்மையான மக்களின் சமுர்த்தி நிவாரணத்தை துண்டித்து அஸ்வெசும நடைமுறைப்படுத்தப்படுகிறது.
*இந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக 34% மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகள்,தொலைக்காட்சிகள்,சலவை இயந்திரங்கள் போன்றவற்றை விற்பனை செய்து உணவு மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையை எட்டியுள்ளனர்.
*நாட்டை வக்குரோத்தாக்கி மக்களுக்கு பீடனைகளை ஏற்படுத்தி இன்று மக்களை ஏமாற்றும் அஸ்வெசும திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
* தற்போது இந்த முடிவினால் விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை,சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை,ஏனைய நோய்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகைகள் என்பன நிறுத்தப்பட்டுள்ளன.
* சமுர்த்தி பெறத் தகுதியானவர்களையும் நீக்கி விட்டு தம் விருப்படி அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
*சமுர்த்தி நீண்ட கால பயணுடையது.அஸ்வெசும ஜனாதிபதி தேர்தலை இலக்காக் கொண்டது.இது ஓர் அரசியல் ரீதியான முன்னெடுப்பு.
*விதவைகள் தேவையுடையவர்கள் போன்ற கஷ்டப்படும் மக்களை இதிலிருந்து தூரமாக்குவது அவர்களை மேலும் சங்கடப்படுத்தும் நிலையாகும்.
*அநீதிக்குள்ளான சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தின் இந்த அசாதாரண செயற்பாட்டுக்கு எதிராக மக்களுடன் வீதிக்கிறங்கி பேராட்டத்தை இன்றிலிருந்து ஆரம்பிப்போம்.
* நேற்று இரத்மலானை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ம மக்களைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.சமுர்த்தி பயனாளிகள் 591 பேரினது பெயர்கள் வெட்டப்பட்டுள்ளன.
* எனவே, உங்கள் கோபத்தை வீட்டிற்குள் வைத்திருப்பதால் பயனில்லை,வீட்டில் உள்ள குழந்தைகளுடன் வெளிப்படுத்துவதில் பயனில்லை.சுயமாக உழைத்தாலும் எமது வாழ்க்கை தீர்மானிப்பவர்களாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்.எனவே எதிர்ப்பை வெளிப்படையாக வெளிப்படுத்த தயாராகுங்கள்.
* புதிதாக வருமானங்களை ஈட்டும் செயல் திறன்கள் நிறைந்த குழுவும்,சமூகத்தை வறுமையில் இருந்து மீட்டெடுத்து மக்களுக்கு சார்பான போக்கு கொண்ட தலைவரும் தேவை.ஐக்கிய மக்கள் சக்தியிடமே இந்த அணி உள்ளது.
* ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு அடிமட்ட மக்கள் மீது உணர்வு இல்லை,அதனால்தான் அந்தக் கட்சியையும்,அவரையும் கைவிட்டோம்.
*இலவசக் கல்வி,இலவச சுகாதாரம்,மக்களை வாழ வைப்பதற்கான ஏற்பாடுகள் இப்போதும் பல அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் நடைமுறையிலுள்ளது.
* மேலும்,இந்த இந்நாட்களில் தேசிய கடன் மறுசீரமைப்பு பற்றி பேசப்படுகிறது,இப்போது ஜனாதிபதி வெள்ளிக்கிழமையை வங்கி விடுமுறையாக பிரகடனப்படுத்தியுள்ளார், வியாழன் வங்கி விடுமுறை,வெள்ளி முதல் ஐந்து நாட்கள் வங்கி விடுமுறை.தேசிய கடன் மறுசீராக்கமாம்.நிதி தெரிவுக்கே இந்த விடயம் தெரியாது.
* எம்.பி.க்களான எங்களுக்கும் தெரியாது, மத்திய வங்கியின் நிதி விவகாரப் பகுதியில் உள்ளவர்களுக்கும் தெரியாது.உதாரணமாக, ஊழியர் சேமலாப நிதிக்கு பொறுப்பான மத்திய வங்கியின் நிதிக் குழுவை வியாழன் அன்று துறைசார் மேற்பார்வை குழுவுக்கு அழைக்கப்பட்டனர்.கடன் மீளச்செலுத்தல் வருடங்கள் நீட்டிக்கப்படுமா அல்லது வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா அல்லது குறிப்பிட்ட தொகை வெட்டப்படுமா என்று தெரியவில்லை என்பது இங்கு புலப்பட்டது.
ஆனால் ஜனாதிபதியின் சமையலறை அமைச்சரவைக்கு இது தெரியும்.
*வைப்பாளர்களின் மூலதனம் மற்றும் வட்டி விகிதங்களுக்கு எதுவும் நடக்காது என்று மத்திய வங்கி ஆளுநர் நேற்று தெரிவித்தார், இது திறைசேரி முறிகள் மற்றும் இறையாண்மைப் பத்திரங்களை வாங்கியவர்கள் கடன் கழிப்பை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை சுட்டுகிறது.அப்படியானால் தேசிய பங்குதார்களான ஊழியர் சேமலாப நிதியமும் இதில் அடங்குகிறது.
* எனவே,உள்நாட்டில் கடனை மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியும்,எதிர்க்கட்சியும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.இலங்கையில் பிரதிநிதித்துவ ஜனநாயகம் உள்ள நாட்டில் இருபத்தி இரண்டு மில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தேசிய கடன் மறுசீரமைப்பை வேண்டாம் என்று சொன்னால்,சர்வதேச நாணய நிதியம் செவிசாயக்கும்.
*ஜனாதிபதி சொல்வது போல் நாங்கள் ஆடத் தயாரில்லை.
Post a Comment