ஆதிநெறியே இஸ்லாம்
இஸ்லாத்தின் வயது 1500 அல்ல.
“இன்ன காலத்தில்தான் தோன்றியது” என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவுக்குத் தொன்மையானது இஸ்லாம்.
முதல் மனிதர் ஆதம்(அலை).
அவருக்கு அருளப்பட்ட வாழ்வியலும் இஸ்லாம்தான்.
ஆதி நெறியே இஸ்லாம்.
பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயதிற்கும் இஸ்லாமிய வாழ்வியலை நிலைநாட்டத் தொடர்ந்து இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.
ஆதம், நூஹ், இப்ராஹீம், இஸ்ஹாக், இஸ்மாயீல், யாக்கூப், யூசுப், தாவூத், சுலைமான், மூஸா, ஜகரியா, யஹ்யா, ஈஸா என அனைவருமே இறைத்தூதர்கள்தாம்.
அந்தத் தூதுத்துவ வரிசையில் இறுதியாக வந்தவர்தாம் நபிகள் நாயகம்(ஸல்)
அவர் கொண்டு வந்தது புதிய மதம் அல்ல.
ஆதம் தொடங்கி ஈஸா வரை எந்த மார்க்கத்தை- தீனை மக்களுக்கு எடுத்துரைத்தார்களோ அதே மார்க்கத்தை இறுதியாக எடுத்துரைக்க வந்தவர்தாம் அண்ணல் நபிகளார்.
யூதம், கிறித்துவம் உட்பட இன்று உலகில் காணப்படும் அனைத்து மதங்களும் இஸ்லாத்திலிருந்து ஏதோ ஒரு வகையில் பிரிந்து சென்றவையே.
“உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்” என்று இறுதிவேதம் கூறுகிறது.
பழங்கால இந்தியச் சமுதாயங்களிலும் இறைத்தூதர்கள் வந்திருப்பார்கள்.
ஆகவே இதிகாசங்களிலும் பழந்தமிழர் பண்பாட்டு அசைவுகளிலும் ஆதி நெறி இஸ்லாத்தின் வாழ்வியல் கூறுகள் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.
இதுதான் அந்த நண்பருக்கான பதில்.
- சிராஜுல்ஹஸன் -
Post a Comment