Header Ads



அத்தியாவசிய பொருளாக கோதுமை மா - அதிவிசேட வர்த்தமானி வெளியானது


வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், கோதுமை மா 'குறிப்பிட்ட பொருட்கள்' பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.


அதன்படி, கோதுமை மா, மக்களின் அத்தியாவசியப் பொருளாக இருப்பதால், கடந்த 16ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், குறிப்பிட்ட பொருட்களின் வகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.


இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


அதன்படி, குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருளின் கையிருப்பை சந்தையில் தட்டுப்பாடின்றி பேண வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், கடந்த 8 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியின் மூலம் குறிப்பிட்ட பொருளாக இருந்த எரிவாயு, அந்தப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.