அமைச்சருக்கு வந்த ஆத்திரம், இனி அதுபற்றி கேட்க வேண்டாமென தெரிவிப்பு
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுப்பது பற்றி இனி எங்களிடம் கேட்க வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வன விலங்குகள் ஏற்படுத்தும் இடையூறுகளால் நாட்டின் விவசாயிகள் எதிர்நோக்கும் அல்லல்கள், கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் டொலரை நம்பி வாழும் விலங்கு நல சங்க அம்மணிகள் மற்றும் ஐயாக்களுக்கு புரியவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment