Header Ads



கற்பாறைக்குள் சிக்குண்ட நிலையில் சடலம் மீட்பு


- Ismathul Rahuman -


வயப பல்கலைக்கழகத்தின் உதவி முகாமையாளர் ஒருவர் நீர்கொழும்பு கடலில் நீராடும் போது கடலில் மூழ்கி மரணம்.


  வேவுட, மெடியகனயைச் சேர்ந்த சமரகோன் முதியன்சலாகே சசின் தாருக்க எனும் 26 வயது இளைஞன் கடலுக்கு பலியானார்.


    கடந்த 4ம் திகதி மாலை பல்வேறு நிறுவனங்களில் வேலைசெய்யும் தனது ஐந்து நண்பர்களுடன் நீர்கொழும்பு கடற்கரை பூங்காவுக்கு வந்துள்ளார்கள்.


   சிறிது நேரத்தில் அவர்கள் ஆறுபேரும் கடலில் இறங்கி குளித்துள்ளனர்.


      குளித்துவிட்டு கரைக்கு வந்தபோது ஒருவரைக் காணவில்லை. பதற்றமடைந்த அவர்கள் நீரில் மூழ்கியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


 மறுநாள் 5ம் திகதி முற்பகலில்  கற்பாறைக்குள் சிக்குண்ட நிலையில் சடலத்தை கண்டுபித்ததாக ஏத்துக்கால் உல்லாசப்பயண பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.


   சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலை பிரேத  அறையில் வைக்கப்பட்டு நீர்கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் சிறி ஜயன்த விக்ரமரத்ன முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்ற பின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.



No comments

Powered by Blogger.