உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் ஹெரோயின்
கொள்கலன் ஒன்றில் இருந்து பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வந்த உருளைக்கிழங்கு அடங்கிய கொள்கலனில் இந்த ஹெரோயின் தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 15 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
Post a Comment