பௌத்தர்களுக்கு எதிரான சதித்திட்டம் குறித்து சஜித் கருத்து, ஜலானிக்கு கௌரவ நாமம்
இந்நாட்டில் புத்தசாசன அமைச்சை நிறுவியதும்,கிட்டிய காலத்தில் பௌத்த மதத்திற்காக அளப்பரிய பணிகளை ஆற்றியது மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களே என நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,அன்று அவர் விகாரைகளுக்குச் சென்று மலர் விளக்கு ஏற்றும் போது கூட சிலருக்கு கேலிக்குரிய விடயமாக அமைந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
உண்மையான பௌத்தர்களாக சம்புத்த சாசனத்தைப் பாதுகாத்து கட்டியெழுப்புவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பைக் சீர்குலைத்து அவர்களை சமூகத்தின் அவமதிப்புக்குள்ளாக்குவதே அந்தச் சதிகளின் நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பௌத்த எதிர்ப்பு சக்திகள் தலைதூக்கும் போது அவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது பாரதூரமான விடயம் என்றும்,பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு உறுதிமொழி எடுப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
குடும்ப அரசியலுக்கு தான் முற்றிலும் எதிரானவர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,ஆனால் அவர்களின் சமூக சேவை உரிமையில் தலையிட தாம் ஒருபோதும் தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜே.ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சேவா வனிதா பிரிவு குறித்து நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்,அந்தத் திட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளின் மனைவிமார்கள் பல்வேறு சமூக சேவைகளை ஆற்றியுள்ளதாகவும்,ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் மனைவியும் கூட இந்த வேலைத்திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார் எனவும் தெரிவித்தார்.
சமூக சேவை ஆற்றுவது என்பது தேர்தலில் போட்டியிடுவதோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெறுவதோ அல்ல என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,சமூக சேவைக்கான ஒவ்வொருவரினது உரிமையையும் யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமதி ஜலானி பிரேமதாச அவர்களுக்கு "ஸ்ரீ சுகத சாசன பிரசாதனி" என்ற கௌரவ நாமம் வழங்கலும்,நயன வாசல திலக அவர்களுக்கு தியத்தலாவ கஹகொல்ல ஸ்ரீ சுதர்சனனாராம புராண விகாரையின் பஸ்நாயக்க பதவி வழங்கலும் என பல உன்னத நிகழ்வுகள் இன்று(17) இடம்பெற்றன.
சம்புத்த சாசனத்தின் இருப்புக்கும்,அதனை நிலைநிறுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் அவர் ஆற்றிய உன்னத பணியைப் பாராட்டி திருமதி ஜலானி பிரேமதாசவுக்கு இந்த கௌரவ நாமம் வழங்கப்பட்டது.
சங்கைக்ககுரிய மெத்முனிகம சிரிசுமண மகாநாயக்க தேரர்,சங்கைக்ககுரிய கஹத்தேவெல சிறி நிவாச மகாநாயக்க தேரர்,நிந்தானே சந்தவிமல மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்விற்கு பிரசன்னமாகி இருந்ததோடு,சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் "ஸ்ரீ சுகத சாசன பிரசாதனி" கௌரவ நாமத்தின் சன்னஸ் பத்திரம் திருமதி ஜலானி பிரேமதாச அவர்களுக்கு வழங்கி வைக்கப்படது.
Post a Comment