Header Ads



'சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல' - உயர் நீதிமன்றம் பரபர தீர்ப்பு


பெண் சடலத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமல்ல என்று கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரங்கராஜன். மதுபோதைக்கு அடிமையான இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு வீதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, வேலையை முடித்துவிட்டு அவ்வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 21 வயது இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. 


இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜன் அப்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, உயிரற்ற அப்பெண்ணின் சடலத்தை அங்கிருந்து மறைவான இடத்துக்கு எடுத்துச் சென்ற ரங்கராஜன் அதனுடன் உடலுறவு செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ரங்கராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


இந்த வழக்கை விசாரித்த தும்கூரு மாவட்ட நீதிமன்றம், பெண்ணை கொலை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், சடலத்துடன் உடலுறவு கொண்டதற்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.


இதை எதிர்த்து ரங்கராஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: குற்றவாளி முதலில் அப்பெண்ணை கொலை செய்துள்ளார். எனவே, கொலை குற்றத்தின் கீழ் அவருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை ஏற்புடையது. ஆனால், அப்பெண்ணை கொலை செய்துவிட்டு வெறும் உயிரற்ற சடலத்துடன் தான் அவர் உடலுறவு கொண்டிருக்கிறார்.


உயிரற்ற ஒன்றுடன் உடலுறவு கொள்வதை பலாத்காரம் என சொல்ல முடியாது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 376வது பிரிவின் கீழ் இது தண்டனைக்குரிய கற்பழிப்பு குற்றமாக கருதப்படாது என கருத்து தெரிவித்தனர். மேலும், ரங்கராஜனுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.


சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1 comment:

  1. இது போன்ற நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சட்ட ரீதியாக நீதிமன்றத்தில் நியாயமான காரணங்களை முன்வைத்து வாதாடி நீதிமன்றத் தீர்ப்பை வாபஸ் பெறவும் இது போன்ற தீர்ப்புகள் எதிர்காலத்தில் வௌியிடுவதைத் தடுக்கும் வகையிலான சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் சட்டத்தில் துறைபோன சட்ட அறிஞர்கள், சட்டத்தரணிகள் முன்நின்று பாடுபட்டு சட்டத்தினூடாக இதனை மாற்றுவதற்கு அவசியமான ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.