Header Ads



தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆதம் லெப்பே ஹஸ்ரத் வபாத்தானார்


காத்தான்குடி ஜாமிஅத்துல் fபலாஹ் அரபுக் கல்லூரியின்  உப அதிபரும், காத்தான்குடி ஸபீலுர் ரஷாத் அறபுக் கல்லூரியின்  ஸ்தாபகரும், இலங்கை தப்லீக் ஜமாஅத் அமைப்பின் முன்னோடிகளில் ஒருவரும், நாடறிந்த தஃவா பேச்சாளருமான   ஆதம் லெப்பே ஹஸ்ரத் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (23.06.2023) மதியம்  02.00 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 


அன்னாரின்  ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி மர்கஸில் வைக்கப்படவுள்ளதுடன்,  ஜனாஸா தொழுகை நாளை சனிக்கிழமை  (24.06.2023) காலை 7.30 மணிக்கு காத்தான்குடி - 05 ஜாமிஉல் ழாபிரீன் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.  


அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவர்களின் சேவைகளைக் கபூல் செய்து, ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவனபதியில் அவர்களுக்கு உயர் அந்தஸ்தை  வழங்குவானாக. மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கும்,  காத்தான்குடியிலும், நாடலாவிய ரீதியிலும்  அவர்களின் பிரிவால் கவலையுற்றிருக்கும் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக.



No comments

Powered by Blogger.