பௌத்த நிலையமொன்றை டுபாயில் நிறுவ உதவுமாறு இலங்கை கோரிக்கை
பௌத்த சமயம் மற்றும் சமய விவகாரம், கலாச்சார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் அழைப்பின் பேரில் ஜக்கிய அரபு எமிரேட்ஸ் இலங்கைக்கான துாதுவர் காலித் நஸார் அல்மாரி அமைச்சரின் அலுவலகத்தில் வைத்து சந்திப்பு நடைபெற்றது.
இச் சந்திப்பின்போது அமைச்சர் தகவல் தருகையில்,
இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சாரம் மற்றும் பௌத்த சமய நிலையமொன்றை துபாய் நாட்டில் நிறுவுவதற்காக துாதுவரிடம் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டது. எதிா்காலத்தில் இலங்கை கலாச்சார பௌத்த நிலையமொன்று ஜக்கிய அரபு எமிரேட்டில் நிறுவப்படும் என அமைச்சர் தெரிவித்தார்
(அஷ்ரப் ஏ சமத்)
Post a Comment