Header Ads



மனைவியின் காலை துண்டாக்கிய கணவன் - மீண்டும் ஒட்டமுடியாத பரிதாபம்


கணவனால் தாக்கப்பட்ட  மனைவி கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், வெட்டப்பட்ட காலை ஒட்ட முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


குடும்ப தகராறு காரணமாக கிரிந்திவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவர் கணவனால் தாக்கப்பட்டு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.


குறித்த பெண்ணின் நிலை தொடர்பில் கம்பஹா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த இலேபெரும தெிவிக்கையில், 


நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால், துண்டிக்கப்பட்ட கால் மாற்று சிகிச்சைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். Tamilm


 

No comments

Powered by Blogger.