இந்த நாத்திகர்களின் கெட்டித்தனத்தை, நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா..?
பயனிலை இருக்க, எழுவாயை அழிக்கும் கையாலாக கைங்கரியத்தை பாருங்கள்!
காரண காரியங்களை ஏற்பார்கள், காரணகர்த்தாவை மறுப்பார்கள்!
தயாரிப்புக்களை ஏற்பார்கள், தயாரிப்பாளனை மறுப்பார்கள்!
புத்தகத்தை ஏற்பார்கள், எழுத்தாளனை மறுப்பார்கள்!
வடிவமைப்பை நம்புவார்கள், வடிவமைப்பாளனை நிராகரிப்பார்கள்!
நெசவுப் பொருட்கள் இருக்கலாம், நெசவாளன் இருக்கக் கூடாது!
ஓவியம் இருக்கலாம், ஓவியன் இருக்க வேண்டிய அவசியமில்லை!
கற்பனைக்கு எட்டாத அண்டங்கள் அகிலங்கள் கோல்மண்டலங்கள், நட்சத்திர திரள்கள், விளிம்புகள் காண முடியாத ஆகயம் வெளிகள் இருக்கலாம், அவைகளை ஆக்கிய ஒரு இறைவன் இருக்க வேண்டியதில்லையாம்!
பல கோடிக்கணக்கான உயிரினங்களையும் அவைகளின் வடிவங்கள், வர்ணங்கள், பண்புகள், மற்றும் செயல்பாடுகளை அச்சொட்டாக குறித்துக்காட்டும் வாழ்க்கை என்ற நுணுக்கமாக எழுதப்பட்ட மிகப்பெரிய புத்கத்துக்கு எழுத்தாளன் இல்லையாம்!
இதயம், கண், காது மற்றும் மூளை என திறம்பட வடிவமைக்கப்பட்ட மொத்த உடலுக்கும் வடிவமைப்பாளன் ஒருவன் அவசியம் இல்லையாம்.
உடல் எலும்புக்கூடுகள், மூட்டுகள்، பிரமிக்க வைக்கும் உயிரணுக்கள் என அதி நுணுக்கமாக நெய்யப்பட்ட உடல் திசுக்களை நெய்ய ஒரு நெசவாளன் தேவை இல்லையாம்!
விதம் விதமான வடிவங்களைக் கொண்ட எட்டு கோடிக்கும் அதிகமான உலக மக்களின் கண்கள், கைரேகைகள், மற்றும் முகங்களை வரையவும், இன்னும் பல கோடிக்கணக்கான உயிரணங்களின் தோற்றங்களையும் உள்கட்டமைப்பை வரையுவும் ஒரு ஓவியன் இருப்பது கட்டாயம் இல்லையாம்!
மனிதன் உட்பட உயிருள்ள ஒவ்வொரு படைப்பின் உடலிலும் நிரலாக்கம் செய்யப்பட்ட மரபணு சார்ந்த தீர்க்கமான தொழிற்பாடுகள் யாவற்றையும் நிரலாக்கம் செய்ய ஒரு புரோகிராமர் இருக்க வேண்டிய தேவை இல்லையாம்!
இப்பபோது எனக்கு இந்த நாத்திகர்கள் பதில் சொல்ல வேண்டும்!
காரண கர்த்தா இல்லது, இவ்வளவு பெரிய காரியங்கள் எப்படி ஆகமுடியும்?
வாகன இயந்திரம் இல்லாமல் ஒரு வாகனமும் ஓடாது, ஆண்டவன் இல்லாமல் வானங்களும் பூமியும் எப்படி ஓடுகிறது?
ஒவ்வொரு பொருளும் இயங்குவதற்கான
ஊந்து சக்தி எப்படி அதனுள் ஊடுருவியது?
சுய அறிவற்ற, சுய நிர்ணயமற்ற, தேர்வுச் சுதந்திரமற்ற வெறுமையான தற்செயல் எப்படி இப்படி ஒரு பேரண்டமாக உருவெடுக்க முடியும்?
மனித பகுத்தறிவு ஏற்க மறுக்கும் இந்த இலகுவான விதிகளுக்கு முன்னால் உங்கள் இந்த வஞ்சகமான வாதங்கள் முட்டாள்தனமான தர்க்கமாக உங்களுக்கு தென்படவில்லையா?
இந்த நாத்திகர்கள் இப்போது எழுந்து வந்து வாயடைக்க வைக்கும் ஒரு கேள்வி கேட்பார்கள் பாருங்கள்:
'நீங்கள் சொல்வது போன்று பிரபஞ்ச இருப்புக்கு காரணமான முதல் காரணகர்த்தாவுக்கும் இந்த விதி பொருந்த வேண்டுமே என கேள்வி எழுப்புவார்கள். அதாவது (யார் கடவுளை படைத்தான்?"
இப்படி நீங்கள் கேள்வி தொடுத்தால் நானும் இருக்க முடியாது, நீங்களும் இருக்க முடியாது, இந்த பிரபஞ்சமும் இருக்க முடியாது! காரணகர்த்தா என்றாலே ஆதி அற்றவன், அந்தம் அற்றவன் என்று பொருள்படுகிறது, ஆக, இப்பிரபஞ்சம் இருக்கிறது என்றபடியால் அதனை ஆக்கிய முதல் காரணகர்தாவை மறுக்க எந்த முகாந்திரமும் உங்களுக்கு கிடையாது.
இந்த அற்புதமான பிரபஞ்சமும் அதன் துல்லியமான நியதிகளும், பகுத்தறில்லாத، வெறும் தற்செயல் உருவாக்கியது என்பதை பகுத்தறிவுள்ள மனிதன் ஏற்பது தகுமா?
ஞானமுள்ள ஒரு விஞ்ஞானி இன்றி விஞ்ஞான மயமான இத்தகைய பிரபஞ்சம் உண்டாகியது என்பது நடக்க முடியுமான காரியமா? நுணுக்கமான நோக்கத்தையும், இலக்கையும் தீர்க்கமான ஆரம்பத்தையும், முடிவையும் கொண்ட (ஒரு பொருள்) இந்த பேரண்டம் ஆக்கியோன் இல்லாமல் ஆகிவடுமா?
இந்த நாத்திகர்கள் தெரிந்துகொள்ளட்டும்!
அவர்கள் அன்றாடம் கண்கூடாகக் காணும் அதே தர்க்கவியல் சான்றுகள் தான் பிரபஞ்ச காரணகர்த்தா ஒருவனின் உள்ளமைக்கான தர்க்கவியல் சான்றாகும்.
விமானத்தை வடிவமைத்து, பறக்க விட்ட ஒருவன் இருக்குமென்றால் பறவைகளை வடிவமைத்து, பறக்க விட்ட ஒருவன் இருக்கத்தான் வேண்டும்.
கேமராவை வடிவமைத்த ஒருவன் இருக்க வேண்டும் என்றால் கண்ணை வடிவமைத்த ஒருவன் இருக்கத்தான் வேண்டும்.
கணினியை வடிவமைத்த ஒருவன் இருப்பான் என்றால் மனித மூளையை வடிவமைத்த ஒருவன் இருக்கத்தான் வேண்டும்.
தண்ணீர் மோட்டரை (பம்ப்) உற்பத்தி செய்தவன் இருப்பான் என்றால் இதயம் என்ற மோட்டரை படைத்தவன் ஒருவன் இருக்கத்தான் வேண்டும்.
கம்பியூடர் ப்ரோகிராம்களை நிரலாக்கம் செய்யும் ஒரு ப்ரோக்ராமர் இருப்பது அவசியம் போல நுட்பமான சிறப்பம்சங்களுடன் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களுக்கான மரபணு குறியீடுகளை நிரலாக்கம் செய்த ஒரு ப்ரோக்ராமர் இருக்கத்தான் வேண்டும்.
இந்த அளவுககோலின் படி பிரபஞ்ச படைப்பினங்கள் யாவற்றையும் அளவிடுவது எவ்வளவு அறிவுபூர்வமானது, தர்க்கபூர்வமானது. இதனை ஏன் இந்த மறுப்பாளர்கள் சிந்திக்கக் கூடாது.!
✍ தமிழாக்கம் / Imran Farook
Post a Comment