செயற்கை இறைச்சி விற்பனைக்கு அனுமதி
ஆய்வகத்தின் தயாரிக்கப்படும் செயற்கை கோழி இறைச்சியை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. கோழியை கொல்லாமல் அதன் இறைச்சியிலோ அல்லது கரு முட்டையில் இருந்தோ பிரித்து எடுக்கப்படும் செல்களுக்கு ஊட்டச்சத்து செலுத்தி உருவாக்கப்படும் செயற்கை இறைச்சி முதன்முதலில் சிங்கப்பூரில் விற்பனைக்கு வந்தது.
மேலும் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. தற்போது அமெரிக்க அரசும் அதனை உற்பத்தி செய்து விற்க அப்சைடு புட்ஸ், குட்மீட் ஆகிய 2 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது.
விற்கும்போது அந்த இறைச்சி ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டது என்பதை வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொழுப்பு, எலும்பு போன்றவை இல்லாத இந்த ஆய்வக இறைச்சிக்கு தான் உற்பத்தி செலவு அதிகம் என்ற போதிலும் அதனை வாங்க நட்சத்திர விடுதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது தொடர்பாக அப்சைடு புட்ஸ் நிறுவன தலைவர் உமா லவேட்டில் கூறும்போது, “அமெரிக்காவில் செயற்கை இறைச்சிக்கு ஒப்புதல் அளித்து இருப்பது இறைச்சியை நமது மேஜையில் சேர்க்கும் விதத்தை மாற்றும். இது மிகவும் நிலையான எதிர்காலத்தை நோக்கிய ஒரு மாபெரும் படியாகும். வாழ்க்கையை பாதுகாக்கும் ஒன்று” என்றார்.
Post a Comment