Header Ads



டொலரின் பெறுமதியை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்துள்ள அரசாங்கம்


நாட்டின் பொருளாதாரத்திற்கு அடுத்த இரண்டு வருடங்களில் என்ன நடக்கும் என்பது பற்றி அறிந்து கொண்ட போது தனக்கு பயம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு இன்னும் விடுபடவில்லை. நாடு பெரும் ஆபத்தில் உள்ளது.


இன்றைய நிலையில் டொலர் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தியதாலும், வெளிநாட்டு கடனை செலுத்தாததாலும் கையிருப்பு தொகை எஞ்சியுள்ளது.


அரசாங்கம் டொலரின் பெறுமதியை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்துள்ளது. அது விடுவிக்கப்படும் பட்சத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவைத் தாண்டி உயரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்தகைய சூழ்நிலையில், இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

  1. இது தான் உண்மையான கதை. இன்னும் மூன்று நான்கு மாதங்களில் டொலரின் இலங்கை நாணயத்தின் பெறுமதி 450 ரூபாவைத் தாண்டும். அப்போது இலவச சனாதிபதிக்கு நேரடியாக ஆப்பு.

    ReplyDelete

Powered by Blogger.