Header Ads



இப்படிச் செய்யாதீர்கள்


கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 29 மில்லியன்  ரூபா பெறுமதியான செப்பு கம்பிகள் திருடர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு கொள்ளையடிப்பதால் நெடுஞ்சாலைகளுக்கு கடும் சிக்கலாக மாறியுள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த அதிகாரி திருடர்கள் செப்பு கம்பிகள், மற்றும் மின்சார கேபிள்களை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றுகிறார்கள்.


மற்றைய நெடுஞ்சாலைகள் மற்றும் புதிய களனி பாலம் போன்றவற்றிலும் இதே நிலையே காணப்படுகிறது என்றும் இங்கு ஆணிகள் வெட்டப்படுதல் மற்றும் செப்பு கம்பிகளை வெட்டுதல் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.