Header Ads



"உணர்ச்சிசார் கவனிப்பை மறுப்பதால், துறவிகளின் நடத்தையில் மாற்றம்" - வயது வரம்பு வருகிறது


நாட்டில் உள்ள சிறுவர்களை துறவிகளாக நியமிக்க வயது வரம்பை அறிமுகப்படுத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


இந்த விடயம் தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் இணைந்து மூன்று பிரிவுகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.


சம்பந்தப்பட்ட பிரிவுகளின் செயற்குழுக்களுடன் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் வயது வரம்பை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய துறவிகளாக மாறிய பின்னர் சிறுவர்களின் பெற்றோரின் கவனிப்பு மறுக்கப்படுவது அவர்களின் ஆளுமை வளர்ச்சி மற்றும் உணர்ச்சி நல்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற ஒரு முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.


"உணர்ச்சிசார் கவனிப்பை மறுப்பதன் காரணமாக இன்று சில துறவிகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், குழந்தை உரிமைகள் தொடர்பான சர்வதேச ‘உடன்படிக்கைகளுக்கு’ இணங்க, அத்தகைய வயது வரம்பு அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.


“அப்போதைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கவின் காலத்தில் வயது வரம்பு அவசியம் குறித்து பேசப்பட்டதாகவும், வயது வரம்பாக 12ஐ அறிமுகப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

No comments

Powered by Blogger.